Skip to main content

Our Manni - PART III

Manni - Part III - The Rites - 9th - 13th August 2009, Srikanth's house, Delhi


09 Aug 2009 - Sunday - 9th Day rites

Got up at 0530; Jayashri and Raji wake up very early and start the routine. Rites started today. Sastrigal came at 0715. Vasu, Sridhar, Srikanth, Ravi performed the rites, left out from Day 3.

ஜீவன் இறந்த உடனேயே உலகை விட்டுச் செல்வதில்லை. அதற்கு வேறு ஒரு உடல் உருவாக்கப்படும் 10 நாட்கள் வரை இவ்வுலகிலேயே இருக்கும் என்கிறது கருட புராணம். அந்த ஜீவன் இந்த 10 நாட்களும் தங்கியிருக்க, சில கருங்கற்களை நிலத்தில் ஊன்றி, மண்ணினால் நன்கு மூடி, அந்த கல்லில் ஜீவனை ஆவாஹனம் செய்து, 10 நாட்கள் வரை தினஸரி எள்ளு ஜலமும், சாதமும் (பிண்டம்) தந்து நித்யவிதி செய்ய வேண்டும்.

இறந்த உடனேயே கல் ஊன்றவேண்டும்; இது முடியாதபோது, 7-ஆம் நாளோ அல்ல்து 9-ஆம் நாளோ கல் ஊன்றலாம் (ஆனால் உத்தமம் இல்லை). கல் ஊன்றிய பிறகு தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு ஜலத்தாலும் தர்ப்பணம் பண்ணவேண்டும். பிணடம் சமர்ப்பிக்க வேண்டும். இது நித்யவிதி எனப்படுகிறது.

முதல் நாளில் மூன்று எனத்தொடங்கி, அடுத்த நாள் 4, பின்னர் 5 என ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போய் 10-ஆம் நாளில் 12 முறை இந்த வாஸோதகம், திலோதகம் தர்ப்பணத்தை செய்ய வேண்டும். (இது ஏகோத்தர வ்ருத்தி எனப்படும்)

ஒரு பூந்தொட்டியில் கல் ஊன்றி, அதற்கு மேற்சொன்னவாறு வாஸோதகம், திலோதகம் தந்து தர்ப்பணம் பண்ணினார்கள். ரமா பிண்டம் சமைத்தாள். ஒவ்வொரு நாளைக்கும் ஒரு சிறிய பிண்டமும், ஒரு பெரிய பிண்டமும் பண்ணினாள் - total 9 small and 9 large. Each பிண்டம் was anointed with தேன், பால், தயிர், நெய், இளநீர் etc. These were later immersed in Ganga (பிண்டம் கரைத்தல்).

Breakfast Pongal at 1030 AM. Vasu & others had direct meals at 11-45 AM after return from Ganga. We had at 12:45; meals are from the caterer from today.

I gave a suggestion that an ad may be inserted in Dinamalar paper, Chennai and Pondy editions tomorrow. Srikanth, Sridhar, Raghavan, Bama jumped with excitement and within a couple of hours the ad with a color photo of Manni was on its way to Chennai!

நித்யவிதி ஏன்?
இறந்தவுடன் ஒரு மனித உடல் எரியூட்டப்பட்டு அழிந்து விடுகிறது. ஆனால் ஜீவனுக்கு மீண்டும் ஒரு உடல் தேவை. ஜீவனுக்கு ஒரு புதிய உடலை உருவாக்கித் தந்தால்தான் ஜீவன் பரலோகத்திற்கு செல்ல முடியும். இந்த புதிய உடலை யார் ஏற்படுத்தி தர வேண்டும்? முன்பிருந்த சரீரத்தை யார் அக்னியால் தஹனம் செய்து அழித்தவரே புதிய உடலையும் உருவாக்கித் தரவேண்டும் (மூத்த மகன்).

இறந்த ஜீவனுக்கு புதிய உடலை உண்டுபண்ணி தருவதற்காக சுத்தமான ஹவிஸ் (சாதம்) செய்து, அதை உருண்டையாக்கி, இறந்தவரின் கோத்ரம், பெயர் சொல்லி பிண்டங்களை தரவேண்டும். பிண்டங்களை மூத்த மகள் செய்து தரவேண்டும் என்பது ரிஷிகளின் வாக்கு.

இறந்த முதல் நாளன்று செய்யப்படும் நித்யவிதி பிண்ட பலியினால், ஜீவனுக்கு தலையும், 2வது நாளில் கண் காது, மூக்கும், 3வது நாளில் கைகள், மார்பு, கழுத்தும், 4வது நாளில் தொப்புள், லிங்கம் போன்றவைகளும், 5வது நாளில் துடைகளும், 6வது நாளில் தோலும், 7வது நாளில் நரம்பு மண்டலமும், 8வது நாளில் ரோமங்களும், 9வது நாளில் வீர்யமும் உண்டாகிறது. 10வது நாள் செய்யப்படும் பிண்ட பலியினால் பசியும், சந்தோஷமும் உண்டாகிறது என்பது ருஷ்யச்ருங்க மஹரிஷியின் வாக்கு.
(நன்றி - வைதீக ஸ்ரீ)

10 Aug 2009 - Monday - 10th Day rites

Got up at 0600; Gita Upanyasam. Earlier in the night, the person came and cooked the பக்ஷணங்கள் for the 10th day ceremonies. Sastrigals came at 8-30 AM and started the proceedings. All of us performed குழி தர்ப்பணம். With ஈர வேஷ்டி (பஞ்சகச்சம்) I was the first to do this, followed by Sundaresan, Ravi, Srikanth, Sridhar, and finally Vasu. Then the கல் (9-ஆம் நாள் ஊன்றியது) எடுக்கப்பட வேண்டும்.

Then பிண்டம், ப்ரபூத பலிதானம், பத்து கொட்டுதல் followed. Starting from Rama, Usha, Bama all the women performed this பத்து கொட்டுதல் - சாதம், பாயஸம், தோசை, முதலான 9 வித ஆகாரங்கள், வாழைக்காய் கறி, பயறு (அகத்திக்கீரை) போன்றவற்றை ஒரு பெரிய துணியில் (மன்னியின் புடைவை) போட்டார்கள். முதல் நாள் ஊன்றிய கல்லை இன்று எடுத்துவிடுவார்கள். It was over at 11-30 AM. Then breakfast (idli from the caterer) for me. Took bath again. Lunch also from the caterer.

Vasu and brothers, Rama and sisters, 3 sons-in-law, and Chitra went to the Ganga for பிண்டம் கரைத்தல். They returned by 145 PM, took bath and performed Ananda Homam. அப்பம், பொரியை அக்னியில் இடுவது. Went on till 3 PM. They had lunch after 3-15 PM.

Sundaresan, Pattu Manni left Delhi by 6-30 PM flight to Mumbai. Gopi left for Chennai by 1000 PM train. Savithri was also to return tonight, but she cancelled her programme and stayed on.
Dinner from caterer - Chappati, Dal Makhani, paneer subzi.

11 Aug 2009 - Tuesday - 11th Day rites.

Got up at 0545. Gita upanyasam. Sastrigal came at 0830 AM and started the day's ceremonies. இன்றைய கர்மா வ்ருஷ்போத்ஸர்ஜனம் என்பதாகும். வ்ருஷபம் என்றால் காளைமாடு அல்லது கன்று. உத்ஸர்ஜனம் என்றால் “விடுவது” . சிவனை (ருத்ரனை) திருப்திப்படுத்த இது செய்யப்படுகிறது. இன்றைய கர்மா முடிந்ததும் ஒரு காளைக் கன்றை சிவன் கோயிலில் விடவேண்டும். இவ்வாறு செய்வதனால் இறந்தவர் தன் வாழ்நாளில் செய்த கோஹத்தி (பசுவை வதைத்தல்) போன்ற பாவங்களிலிருந்து விடுவிக்கும்.

பின்னர் ஆத்ய (முதல் மாத) மாஸிகம் என்னும் சிராத்தம் பண்ணவேண்டும். இறந்தவர்க்கு இன்னும் பித்ருத்வம் (முன்னோர்களுடன் சேர்க்கை) கிடைக்காதபடியால், இறந்தவர் ப்ரேத ஸ்வரூபியாக வருவதாக ஐதீகம். ஒரு ஒத்தன் வந்து, தானே சிராத்த சமையலை செய்துகொண்டு அதை சாப்பிட்டுவிட்டு போய்விடுவான். (இவன் சமைக்கும்போதும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் வெளியில் போகும்போதும் யாரும் பார்க்கக்கூடாது). இறந்தவர்க்கு இன்னும் பித்ருத்வம் கிடைக்காததால், இந்த ஆத்ய மாஸிக சிராத்தத்தை ”ஏகோத்திஷ்டம்” என்னும் முறைப்படி, அதாவது விச்வேதேவர் முதலிய தேவர்கள் இல்லாமல், இறந்தவரையே ஆவாஹனம் செய்து நடத்துவார்கள்.

பின்னர் மறுபடியும் ஒரு பிராஹ்மணனை வரித்து ஹோமம் செய்து முறைப்படி சிராத்தம் பண்ணவேண்டும். இதற்கு ஆவ்ருத்த ஆத்ய மாஸிகம் என்று பெயர். இது இறந்தவருக்காக ஹோமம் செய்து நடத்தப்படும் முதன்முதல் சிராத்தமாதலால், இதை மிகவும் ஸ்ரத்தையுடன் செய்யவேண்டும். நன்றி :: வைதீக ஸ்ரீ

It was over by 12 noon. Sridhar and others went to Ganga for பிண்டம் கரைத்தல் today. We had lunch (caterer) by 1-15 PM. Not much work today. Vasu and co prepared everything for tomorrow. Bama prepared tasty வத்தல் குழம்பு for me; others had அரிசி உப்புமா.

Tomorrow will be the toughest day with two totally different சமையல், one for the சிராத்தம் and the other for ஸோதகும்பம். Expected to go beyond 5 PM.

12 Aug 2009 - Wednesday - 12th Day rites - சபிண்டீகரணம், ஸோதகும்பம்

Got up at 0545; Gita upanyasam. Sastrigal came at 0900 and started the proceedings. First, it was சபிண்டீகரணம் எனப்படும் சிராத்தம். (3 பிராமணாள் சாப்பிடுவார்கள். இவர்களுக்கு மட்டும் சுத்த சிராத்த சமையல் பண்ணவேண்டும்). ராஜி முதலான 4 நாட்டுப்பெண்கள் இந்த சமையலை செய்தனர்.

சபிண்டீகரண சிராத்தம் நீண்ட நேரம் நீடிக்குமாதலால், இதற்கு அடுத்து செய்ய வேண்டிய ஸோதகும்ப சமையலை இன்னொரு தனி இடத்தில் விஜயா, உஷா, பாமா, சாவித்திரி ஆகியோர் செய்வதாக நேற்றைய திட்டம். ஆனால், சாஸ்திரிகள் இதுபோன்று இரண்டு சமையல்களை ஒன்றாக செய்யக் கூடாது; சபிண்டீகரண சிராத்தம் முடிந்ததும், வீட்டை அலம்பி, மெழுகி, எல்லாரும் குளிக்க வேண்டும்; குளித்த பின்னரே ஸோதகும்பம் சமையலை ஆரம்பிக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்.

இறந்தவருக்கு முதல் வருஷத்தில் செய்ய வேண்டியது மொத்தம் 16 சிராத்தங்கள் - அவை :: ஸபிண்டீகரணம் பண்ணுவதற்கு முன் ஆத்ய, த்ரைபக்ஷிக, ஷாண்மாஸிக, அந்வாப்திக ஊனம் 4, அதிகமாஸ்யம்-1, மாஸ்யங்கள்-11 ஆக 16 ச்ராத்தம் ஏகோதிஷ்டமாகப் பண்ணிவிட்டு பின்னரே ஸபிண்டீகரணம் பண்ணவேண்டும் என்பது விதி. காலத்தாலும், நடைமுறையாலும் அது ஸாத்யமில்லை என்பதால் ஆகர்ஷண விதியைக்கொண்டு மேற்படி 16 மாஸ்யங்களை அன்னமாகவோ, ஆமமாகவோ பண்ணிவிட்டு 12ம் நாளே ஸபிண்டீகரணம் பண்ணலாம் என்ற விதிப்படி (சாஸ்திரப்படி) 16 பேருக்கு ஆமமாக அரிசி, வாழைக்காய் இத்யாதிகளுடன் தக்ஷிணை கொடுத்து தத்தம் செய்வது சோடசம் ஆகும். இது ஒற்றைப்பில்லுடன் ப்ராசீனாவீதியில் பண்ணவேண்டும். இது முடித்து அடுத்த காரியம் துவங்கும் முன் தீர்த்தமாடவேண்டும். வாசு இவ்வாறே 16 பேர்களுக்கு அரிசி, வாழைக்காய் கொடுத்தான்.

நேற்று (11-ஆம் நாள்) வரை ப்ரேத ரூபத்தில் இருந்த ஜீவன், இன்று பித்ருத்வம் கிடைத்து, தனது பித்ருக்களுடன் சேர்வதாக ஐதீகம் - இதைத்தான் சபிண்டீகரணம் என சொல்வார்கள். 9 மணிக்கு ஆரம்பித்தது, பகல் 1-45க்கு முடிந்தது. பிண்டங்களை ஒன்று சேர்த்ததும் (சிறிய பிண்டத்தை பெரிய பிண்டங்களுடன் சேர்க்க வேண்டும், சபிண்டீகரணம்) ஜீவனுக்கு பித்ருத்வம் கிடைத்தது.

பித்ருத்வம் கிடைத்த இந்த ஜீவன் விராஜ நதியைத் தாண்டி ஸ்ரீவைகுண்டம் போகவேண்டும். தாண்டிப்போவதற்கு உதவியாக கர்த்தா பற்பல தானங்களை பிராமணர்களுக்கு வழங்கவேண்டும் - (கரும்பினால் செய்த) ஓடம், இருட்டில் ஒளி வீச விளக்கு, பாதுகாப்புக்கு மணி ஓசை, என்பன போன்ற பல பொருட்களை வாசு பிராமணர்களுக்கு தானமாக வழங்கினான்.

பிறகு பிண்டம் கங்கையில் கரைக்க எடுத்து செல்லப்பட்டது. பிறகு எல்லாரும் குளித்து, வீடு அலம்பப்பட்டது. விஜயா முதலானோர் 2-45க்கு ஸோதகும்ப சமையலை ஆரம்பித்தனர். சாஸ்திரிகள் 4-30 மணிக்கும், நாங்கள் யாவரும் 5 மணிக்கும் சாப்பிட்டோம். வாசு முதலானோர் சாப்பிடும்போது மாலை மணி 5-30!


ஸோதகும்பம் : - இறந்தவரை நேரடியாக பித்ருவாக வரித்து முதன்முதலாகச் செய்யப்படும் ச்ராத்தம் ஸோதகும்பம். இது ஸாதாரணமாக ஸங்கல்ப விதானத்தில் செய்யப்படும். ஒரு பிராஹ்மணர் சாப்பிடுவார். அவருக்கு குடை, கைத்தடி, விசிறி, உட்கார பாய், பித்தளை சொம்பு, பஞ்சபாத்திர உத்தரணி, புது பத்தாறு வேஷ்டி போன்றவை தானமாக கொடுக்க வேண்டும்.

Sastrigal gave the list of dates for 27th, 45th, 180th days' ceremonies and monthly மாஸிகம் dates.
Today was the end of the Apara Karyangal and tomorrow will be the க்ரேக்கியம் (சுபஸ்யம்)

13 August 2009 - 13th Day rites - கிரேக்கியம் (ஸுபஸ்யம்)

Got up at 0515; Gita upanyasam. Today is கிரேக்கியம் and Sastrigal came at 0900. Navagraha Homam was done. ஒரு பிராமணர் வருவார். புது இரும்பு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு அதில் எல்லாரையும் முகம் பார்க்க சொல்லுவார்கள். (சிலர் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் நாணயங்களை  எண்ணெயில் போடுவார்கள். எல்லாரும் முகம் பார்த்தபிறகு, அந்த வாணலியை இந்த பிராமணர் எடுத்துப் போவார். அவர் வெளியில் போகும்போது யாரும் அவரை பார்க்கக்கூடாது; கண்களை இறுக்க மூடிக்கொள்ள வேண்டும். போனபின்னர் திறந்து கொள்ளலாம்.

New clothes given to the entire அண்ணா family by Vasu & brothers. Rituals over by 1PM. Then Sastrigal Shri SRINIVASAN spoke for one hour explaining the significance of the rites from day 1 to day 12. It was interesting and most informative.

Sruthi and Vibha had penned a great tribute to their பாட்டி which Vibha read. It was an excellent and heart-warming tribute from the grandchildren of Manni. Read it here.

Then all of us had lunch by 2 PM.

Evening Vijaya and I left Dwaraka at 6-40PM with Srikanth, Jayshri.for the airport and our flight to Chennai started by 8-45PM. Reached Chennai by 1AM, Arun was waiting for us at Chennai airport and we were home by 1-45 AM

Thus the last rites of Manni were performed with utmost shraddha and piety by Vasu, Sridhar, Srikanth, Ravi. Raji, Chitra, Jayashri, Radha, Rama, Usha, Bama, Satyamurthy, Gopal, Raghavan were all very busy and active in making these 13 days a memorable period.

நன்றி: வைதிகஸ்ரீ, அஹோபிலம்.காம், வாசு வாத்தியார், வேளுக்குடி கிருஷ்ணன் ... ... ... ...

ராஜப்பா
29-08-2009,
 மாலை 4-15 மணி

Comments

  1. அன்பு சித்தப்பா,

    உங்கள் blog-ஐ படித்தேன்... கண்ணிர் வடித்தேன்... மனம் உருகினேன்..

    எல்லா காரியங்கள் நாட்களையும் விவரமாக விளக்கி இருந்திர்கள். படிக்க படிக்க அம்மாவின் ஞாபகம் என்னை மிகவும் உருக்கியது. தினமும் நான் அலுவலகம் முடிந்து விடு திரும்பும் போழுது, அம்மா தன்னுடைய chair-ல் உட்கார்திருப்பாள். நான் Fresh-ஆகி அம்மா பக்கத்தில் உட்காருவேன், அம்மா அன்றைய விஷயங்கள் அனைத்தையும் என்னிடம் சொல்லுவாள். இப்போழுது அந்த chair காலியாக இருந்தாலும் அந்த great அம்மாவின் நினைவில் முழுகுகிறேன்.

    நீங்கள் எழுதியபடி "Call Manni (Amma), and seek her advice" was the suitable Mantra.

    இப்போழுது அண்ணாவும், அம்மாவும் நம் கண் முன் இல்லை என்றாலும் எப்போழுதும் எல்லா இன்பதிலும், துன்பதிலும் அவர்கள் கடவுளாக இருந்து ஆசிர்வதிக்க பிரார்த்திக்கிறேன்.

    சில நாட்கள் முன் பின்வரும் கவிதையை படித்தேன்.. அதை இங்கு சமர்பிக்கிறேன் :

    அம்மா

    சுமையைச் சுகமாக்கி
    சுமந்து சுகமடைந்தாய்

    உதிரத்தை அமுதாக்கி
    உயிரூட்டினாய்

    பத்தியச் சோறுண்டு
    பாதுகாத்தாய்

    முதல் உறவாய்
    முதல் குருவாய்
    முதல் இறையாய்
    நிறைந்தாய்

    என் உணர்வே
    உன் உயிராய்
    என் உறவே
    உன் உலகாய்
    மா(ற்)றினாய்

    தன்னலமற்ற தாயே...
    நீயின்றி நானில்லையே
    ஆயிரம் உறவுகள்
    கொண்டாலும்
    உனக்கு இணை இல்லையே...

    கோயிலில் தொழுதாலும்
    அங்கே புன்னகைப்பது
    உன் முகம் தான்

    கடவுள் கண்முன் வந்தால்
    கேட்பேன் ஒரே வரம்
    "மீண்டும் உன் கருவறையில்
    ஓர் இடம்"

    உங்கள் துணையுடன்,
    ரவி.

    ReplyDelete
  2. dear chithappa
    Read all the 3 parts. Very detailed. We can keep this for our entire life and to generations to come. Thanks. You may also please add the 'ninaivanjali' given by sruthi and others.

    sridhar.
    4 Sep 2009

    ReplyDelete
  3. Dear Raja Chiththappa,

    We read the blog posted by you, it is so much in detail as a repeat telecast of the entire episode.

    This is very informative and can be read nth no of times.

    We have already taken a printout of the same and put it in our records.

    Thanks and Namaskarams.

    Warm regards,

    Srikanth/Jayashree/Anand/Srinath

    ReplyDelete
  4. Jayaraman, VadapalaniSeptember 5, 2009 at 10:40 AM

    Dear Rajappa,

    Your writeup about Manni- I read all the three parts, excellent narration, esp, the
    third part-par excellence.

    Jayaraman
    4 Sep 2009

    ReplyDelete
  5. Sir,

    thanks for the excellent writeup.

    I have a doubt and request you to check with your Vadhyar and let me know. (Hope I can ask this request)

    If a father/mother has only daugther(s) and no son(s), and also if those daugther(s) are not married or no boy(s) as their child (i.e no Peran), who has to do the cremation rituals and subsequent karma activities?

    Assuming that this father/mother has no brothers or other close relative males who are either not there or not willing to do, in such a situation, who will/has to do the cremation and subsequent Nithyavidhi or monthly/annual rituals?

    thanks Sir.

    Mahesh

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Kumar-Lalitha Sashti Aptha Poorthy

Kumar celebrated his Sashti Aptha Poorthy (60th birthday) on 03 June 2009 at Annanagar West. Rudra Ekadasi was performed at 05:00 AM; we didn't attend this. Ganesan had come from Mumbai on 2nd June afternoon 1:30 PM and he stayed with us. Ramani came by train on 2nd morning and he stayed with Lalitha at Avadi. On 3rd, we two and Ganesan took ARUN's car with a driver and went to Annanagar by 0815. The rituals were going on already. Indira, Sruthi, Akila, Raja, Aparna, Jyotsna were already there. Later, Saroja, Athimber came. Gayathri, Sowmya, Sriram came with Sudha and her inlaws in a calltaxi. Krithika came with Aditi in their car, with a driver. Arvind took ill suddenly, so he couldn't come. TSG and mami came. The function was a nice one; it was over by 1215 PM. After lunch all of us started leaving. We were home by 2-15PM. rajappa 11:00 am on 6 June 2009

Anna Centenary Library, Kotturpuram

ANNA CENTENARY LIBARARY (அண்ணா நூற்றாண்டு நூலகம்) is a newly established State Library of Tamilnadu. It was declared open on 15th Sept 2010. Located in Kotturpuram, Chennai. This last Sunday, 1st May 2011, we hit upon the idea - we will go and see this library. No serious reason, but a sudden whiff of fancy. Vijaya, her old classmate and friend Mrs Prema, and I left house at 3-30PM. A bus upto Madhya Kailash, and an auto thereon, left us at the gates of this huge, beautiful building at 4 PM. From the outside, it was immensely impressive and imposing - maybe of 9 or 10 floors, exquisitely constructed. As we walked the lawns to reach the Main Entrance, the interest in us was bubbling. (Caution: Handbags, Cameras are strictly prohibited. Even waterbottles are not allowed inside the halls.) There is a 5-feet bronze statue of Mr CN Annadurai, in whose name and honour this library is built. This is the Tamilnadu Chief minister Mr M Karunanidhi's pet project and he, as usual, has ov...

Dr. MUTHULAKSHMI REDDY

Dr Muthulakshmi Reddy The road from Adyar Signal to Thiruvanmiyur signal (in Chennai) is called Lattice Bridge Road (LB Road); this English name was re-christened as Dr Muthulakshmi Reddy Road long back, but the old English name only prevails now. Who is this Dr Muthulakshmi Reddy? In the princely state of Pudukkottai there lived Narayanaswami Iyer who married a devadasi by name Chandramma - this marriage created a sensation that time. To this couple, eight children were born out of whom four died as infants. Muthulakshmi was one that survived (born: 30 July 1886). M's sister Nallamuthu, learned English, went on to study in UK, became a Professor in QMC, Chennai, and later its Principal - the first Indian principal of QMC. Muthulakshmi went to a school in Pudukottai till the age of 13; later she studied at home tutored by teachers. She passed matriculation in the year 1902. She started dreaming about becoming a graduate. Bur her father, with meagre pension could not send her ...