Manni - Part III - The Rites - 9th - 13th August 2009, Srikanth's house, Delhi 09 Aug 2009 - Sunday - 9th Day rites Got up at 0530; Jayashri and Raji wake up very early and start the routine. Rites started today. Sastrigal came at 0715. Vasu, Sridhar, Srikanth, Ravi performed the rites, left out from Day 3. ஜீவன் இறந்த உடனேயே உலகை விட்டுச் செல்வதில்லை. அதற்கு வேறு ஒரு உடல் உருவாக்கப்படும் 10 நாட்கள் வரை இவ்வுலகிலேயே இருக்கும் என்கிறது கருட புராணம். அந்த ஜீவன் இந்த 10 நாட்களும் தங்கியிருக்க, சில கருங்கற்களை நிலத்தில் ஊன்றி, மண்ணினால் நன்கு மூடி, அந்த கல்லில் ஜீவனை ஆவாஹனம் செய்து, 10 நாட்கள் வரை தினஸரி எள்ளு ஜலமும், சாதமும் (பிண்டம்) தந்து நித்யவிதி செய்ய வேண்டும். இறந்த உடனேயே கல் ஊன்றவேண்டும்; இது முடியாதபோது, 7-ஆம் நாளோ அல்ல்து 9-ஆம் நாளோ கல் ஊன்றலாம் (ஆனால் உத்தமம் இல்லை) . கல் ஊன்றிய பிறகு தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு ஜலத்தாலும் தர்ப்பணம் பண்ணவேண்டும். பிணடம் சமர்ப்பிக்க வேண்டும். இது நித்யவிதி எனப்படுகிறது. முதல் ...