மன்னியின் ஆப்தீக ஸ்ராத்தம்.
பெரிய மன்னி (மைதிலி) சென்ற ஆண்டு 2009 ஆகஸ்ட் மாஸம் 1-2 ஆம் தேதி நடு இரவில் காலமானார். அவரது ஆப்தீக ஸ்ராத்தம் இந்த வருஷம் 2010 ஜூலை 22-ஆம் தேதி தில்லியில் நடந்தது. அதற்கு விஜயாவும் நானும் ஜூலை 16 காலை ராஜதானி எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து கிளம்பினோம். அர்விந்த் காரில் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தோம்.
தில்லியில் வாசுவும், அபிலாஷும் வந்து எங்களைக் கூட்டிச் சென்றனர்; ஸ்ரீகாந்த் வீட்டில் காரியங்கள் நடந்தன. நாங்கள் அங்குதான் இருந்தோம்.
ஞாயிறு, ஜூலை 18 ஊன மாஸிகம் நடைபெற்றது.இதுதான் 4வதும் இந்த வருஷத்தில் செய்யப்படும் கடைசியுமான மாஸிகம். வாசு, ஸ்ரீதர், ஸ்ரீகாந்த், ரவி நால்வரும் கலந்து கொண்டனர். சாஸ்திரிகள் 11-30 மணிக்கு வந்து, காரியத்தை ஆரம்பித்தார். மதியம் 1-30க்கு முடிந்தது. 2-45 க்கு சாப்பாடு முடிந்தது. தயிர் பச்சடி, பழப் பச்சடி, வாழைக்காய், சேப்பங்கிழங்கு, பாகற்காய் என 3 கறிகள், (எல்லா கறிகளிலும் நிறைய தேங்காய்), கொத்தவரங்காய் கூட்டு, வாழைத்தண்டு மோர்க்குழம்பு, ரசம், தயிர், எள் உருண்டை, பயத்தம் உருண்டை, அதிரஸம், வடை, பயத்தம் பருப்பு பாயஸம் என திவஸ சமையல்தான்.
புதன், ஜூலை 21 ஆப்தீக ஸோதகும்பம். ஒரே ஒரு வாத்தியார் மட்டும் 10 மணிக்கு வந்தார். 11-30 க்கு முடிந்தது. இன்று “ஸமாராதனை” சாப்பாடு. வாழைக்காய், பீன்ஸ் கறி, பரங்கிக் காய் கூட்டு, பாகற்காய் பிட்ளை, தயிர் பச்சடி, பழப் பச்சடி, மைசூர் ரசம், தயிர், எலுமிச்சம்பழ சாதம், எள் உருண்டை, பயத்தம் உருண்டை, மைசூர் பாகு, ஆம வடை, பால் பாயஸம், மாங்காய் ஊறுகாய்.
வியாழன், ஜூலை 22: ஆப்தீக ஸ்ராத்தம். 3 சாஸ்திரிகள் 10 மணிக்கு வந்தனர். சொம்பு, மணி, விளக்கு, பாத்திரங்கள், தங்க ம்ற்றும் வெள்ளி காசுகள், குடை, தடி, பாய், செருப்பு, போன்ற நிறைய தானங்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன. பகல் 12-30க்கு முடிந்தது.
வழக்கமான ஸ்ராத்த சமையல்தான்.தயிர் பச்சடி, பழப் பச்சடி வாழைக்காய், பாகற்காய், கொத்தவரங்காய் என 3 கறிகள், புடலங்காய் கூட்டு, வாழைத்தண்டு மோர்க்குழம்பு, ரசம், தயிர், எள் உருண்டை, பயத்தம் உருண்டை, அதிரஸம், வடை, பயத்தம் பருப்பு பாயஸம். மூன்று நாட்களுமே ராஜி, சித்ரா, ஜெயஸ்ரீ, ராதா நால்வருமே சமையல் பண்ணினார்கள்.
ஆப்தீக ஸ்ராத்தத்திற்கு விஷ்ணு இலை கிடையாது; தர்ப்பணமும் கிடையாது.
வெள்ளி, ஜூலை 23: கிரேக்கியம் எனப்படும் சுபஸ்யம். காலை 8-30க்கு ஆரம்பித்து, 11-15க்கு முடிவு பெற்றது. ”நவ கிரஹ யக்யம்” என்பது “கிரஹ யக்யமாக” மருவி, இப்போது “கிரேக்கியமாக” மாறியுள்ளது. ஹோமமும், நவக் கிரஹ பூஜையும் நடந்தன. இன்றும் பல தானங்கள் அளிக்கப் பட்டன. எல்லாரும் புது ஆடைகள் உடுத்திக் கொண்டார்கள். 1-15க்கு சாப்பாடு முடிந்தது. இன்றைய சாப்பாடு CATERERS மூலம் வந்தது. தயிர் பச்சடி, பழப் பச்சடி,கோசுமல்லி, தேங்காய் போட்ட காபேஜ்,, உருளைக்கிழங்கு கறி, அவியல், கத்தரிக்காய் சாம்பார், ரசம், ஆம வடை, அப்பளம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல். சுமார் 40 பேர் சாப்பிட்டோம்.
பகல் 1-45க்கு கிளம்பி நாங்கள் 3 மணிக்கு ஸ்டேஷன் வந்தோம். ராகவன் காரில் கொண்டு வந்து விட்டான். ராஜதானி எக்ஸ்பிரஸ் 4 மணிக்குக் கிளம்பியது. மறுநாள், சனிக்கிழமை ஜூலை 24ஆம் தேதி இரவு 9-20 க்கு சென்னை வந்தோம். அர்விந்த, அதிதி வந்து கூட்டிச் சென்றனர்.
இவ்வாறாக, மன்னியின் ஆப்தீகக் காரியங்கள் நல்ல முறையில் நடந்தேறின. எங்களைத் தவிர, சுகவனமும் வந்திருந்தான். செகந்திராபாத்திலிருந்து ரமா வந்தாள்.
rajappa
26 July 2010
11:15 AM

Comments
Post a Comment