அப்பா ஸ்ராத்தம் 06-09-2014
அப்பாவின் ஸ்ராத்தம் இந்த வருஷம் செப்டம்பர் 6 சனிக்கிழமை நடந்தது. வழக்கம் போல 5 நாட்களுக்கு முன்பே மளிகை சாமான்களை வாங்கிவிட்டோம். மார்த்தாண்டன் கடையிலிருந்து வாங்கினோம்.
வெள்ளிக்கிழமை 5-ஆம் தேதி நாங்கள் திருவான்மியூர் மார்க்கெட்டிலிருந்து காய்கறிகள் காய்கறிகள, பழங்கள், வாழையிலை வாங்கினோம். அன்று மாலை 4-45க்கு காய்கறிகள் நறுக்க ஆரம்பித்தோம்; 7 மணிக்கு முடிந்தது. பாத்திரங்கள் தேய்த்து வைப்பதும் முடிந்தது.
மறுநாள் 6-09-2014 காலை 4 -30க்கு இரண்டு பேரும் எழுந்து, குளித்து விட்டோம்; ஸ்ராத்த சமையலை விஜயாவும் கிருத்திகாவும் ஆரம்பித்தனர். 7-30 முதல் ஜெயராமன், கல்யாணி, மங்களம், வந்தனர். விஜயா, கிருத்திகா, மங்களம், கல்யாணி ஆகிய நால்வரும் சமையலில் ஈடுபட்டனர். பின்னர் காயத்ரி, அருண், குழந்தைகள், சுகவனம் வந்தனர். அடுத்து, சதீஷ், மகேஷ், சுபா, குழந்தைகள் வந்தனர். கடைசியாக ஹர்ஷிதா (சுதன் குழந்தை) வந்தாள்.
10:15 க்கு 2 பிராமணாளும் சாஸ்திரிகளும் வந்தனர். ஸ்ரீ வெங்கடேச சர்மாதான் வாத்யார். 10:35க்கு ஆரம்பித்த ஸ்ராத்தம் 1-!5 க்கு பிராமணாள் சாப்பிட்டதும் 90% முடிந்தது. சாஸ்திரிகள் நன்றாக பண்ணி வைத்தார். மந்திரங்களை நான் சொல்லி பண்ண, ஜெயராமன், சுகவனம் பங்கு கொண்டனர். சுகவனத்தின் உடல்நலம் சரியாக இல்லாததால் அவன் போய் படுத்துக் கொண்டு விட்டான். விஷ்ணு இலையில் சாப்பிட சதீஷ் வந்தான். ப்ரஹ்ம யக்ஞம் முதலானவை முடிந்ததும் ஸ்ராத்தம் நிறைவு பெற்றது. 1:30 மணிக்கு சாஸ்திரிகள் புறப்பட்டார்.
அவருக்கு 1000.00ம், பிராமணாளுக்கு தலா 500.00 வீதமும் மொத்தம் தக்ஷிணையாக 2000.00 ரூபாய் கொடுத்தோம்.
பின்னர் இரண்டு பாட்சுகளாக் நாங்கள் சாப்பிட்டோம். 3.00 க்கு ஜெயராமன், கல்யாணி, மங்கள்ம் ஆகியோர் கிளம்பினர். வர வர சிரமம் அதிகமாக உள்ளது. WILL POWER இருப்பதால் எப்படியோ சமாளித்து வருகிறோம், இந்த வருஷமும் (2014) ஸ்ராத்தங்கள் நன்றாக நடந்தேறின - அப்பா, அம்மாவின் ஆசிகளால். அப்பா, அம்மாவிற்கு விஜயா மற்றும் என்னுடைய நமஸ்காரங்கள். இது விஜயாவும் நானும் சென்னையில் செய்யும் 19-வது ஸ்ராத்தம்.
ராமமூர்த்தி அத்திம்பேர் சென்ற அக்டோபரில் காலமாகி விட்டார். அதனால் சரோஜாவும் வரவில்லை.
இந்த ஸ்ராத்தத்தில் நாங்கள் இருவர், சுகவனம், ஜெயராமன், கல்யாணி, மங்களம், அருண், காயத்ரி, கிருத்திகா, அர்விந்த், சுபா, மகேஷ், சதீஷ், அதிதி, அர்ஜுன், சௌம்யா, ஸ்ரீராம், சுகோஷ், மஹதி, ஹர்ஷிதா ஆகியோர் (20 பேர்) கலந்து கொண்டோம். விஷ்ணு இலையில் சதீஷ்.
ராஜப்பா
மாலை 5 மணி
07-09-2014

Comments
Post a Comment