அப்பா ஸ்ராத்தம் 06-09-2014 அப்பாவின் ஸ்ராத்தம் இந்த வருஷம் செப்டம்பர் 6 சனிக்கிழமை நடந்தது. வழக்கம் போல 5 நாட்களுக்கு முன்பே மளிகை சாமான்களை வாங்கிவிட்டோம். மார்த்தாண்டன் கடையிலிருந்து வாங்கினோம். வெள்ளிக்கிழமை 5-ஆம் தேதி நாங்கள் திருவான்மியூர் மார்க்கெட்டிலிருந்து காய்கறிகள் காய்கறிகள, பழங்கள், வாழையிலை வாங்கினோம். அன்று மாலை 4-45க்கு காய்கறிகள் நறுக்க ஆரம்பித்தோம்; 7 மணிக்கு முடிந்தது. பாத்திரங்கள் தேய்த்து வைப்பதும் முடிந்தது. மறுநாள் 6-09-2014 காலை 4 -30க்கு இரண்டு பேரும் எழுந்து, குளித்து விட்டோம்; ஸ்ராத்த சமையலை விஜயாவும் கிருத்திகாவும் ஆரம்பித்தனர். 7-30 முதல் ஜெயராமன், கல்யாணி, மங்களம், வந்தனர். விஜயா, கிருத்திகா, மங்களம், கல்யாணி ஆகிய நால்வரும் சமையலில் ஈடுபட்டனர். பின்னர் காயத்ரி, அருண், குழந்தைகள், சுகவனம் வந்தனர். அடுத்து, சதீஷ், மகேஷ், சுபா, குழந்தைகள் வந்தனர். கடைசியாக ஹர்ஷிதா (சுதன் குழந்தை) வந்தாள். 10:15 க்கு 2 பிராமணாளும் சாஸ்திரிகளும் வந்தனர். ஸ்ரீ வெங்கடேச சர்மாதான் வாத்யார். 10:35க்கு ஆரம்பித்த ...