அப்பா ஸ்ராத்தம் - 16-09-2013
அப்பாவின் ஸ்ராத்தம் இந்த வருஷம் 16 செப்டம்பர் திங்கட்கிழமை நடந்தது. வழக்கம் போல 7 நாட்களுக்கு முன்பே மளிகை சாமான்களை வாங்கிவிட்டோம். மார்த்தாண்டன் கடையிலிருந்து வாங்கினோம்.
ஞாயிறு 15-ஆம் தேதி நாங்கள் மந்தைவெளிக்கு ஒரு கல்யாணத்திற்கு காரில் சென்றோம். அங்கு கோவை பழமுதிர் நிலையத்தில் காய்கறிகள, பழங்கள் வாங்கினோம். தூக்க வேண்டிய சிரமம் குறைந்தது. பிறகு, 10 மணிக்கு திருவான்மியூர் மார்க்கெட் சென்று, வாழையிலை வெற்றிலை, வாழைக்காய் போன்றவற்றையும் ,விட்டுப்போன மீதி காய்கறிகளையும் வாங்கினோம்.
அன்று மாலை 4-45க்கு காய்கறிகள் நறுக்க ஆரம்பித்தோம்; 7 மணிக்கு முடிந்தது. பாத்திரங்கள் தேய்த்து வைப்பதும் முடிந்தது. மறுநாள் 16-09-2013 காலை 5 -15க்கே இரண்டு பேரும் எழுந்து, குளித்து விட்டோம்; ஸ்ராத்த சமையலை விஜயாவும் கிருத்திகாவும் ஆரம்பித்தனர். 7-00 க்கு சரோஜா அக்காவும், மங்களமும், சுகவனமும் வந்தனர். விஜயா, கிருத்திகா, மங்களம், சரோஜா ஆகிய நால்வரும் சமையலில் ஈடுபட்டனர்.
10:15 க்கு 2 பிராமணாளும், 11-15க்கு சாஸ்திரிகளும் வந்தனர். ஸ்ரீ வெங்கடேச சர்மாதான் வாத்யார். இவர் போன வருஷம் அப்பா ஸ்ராத்ததிற்கு வந்தவ்ர். 11-20க்கு ஆரம்பித்த ஸ்ராத்தம் 1-30 க்கு பிராமணாள் சாப்பிட்டதும் 90% முடிந்தது. இந்த சாஸ்திரிகள் நன்றாக பண்ணி வைத்தார். மந்திரங்களை நான் சொல்லி பண்ண, சுகவனம் பங்கு கொண்டான். 11-30க்கு ராமமூர்த்தி அத்திம்பேர் வந்தார் ப்ரஹ்ம யக்ஞம் முதலானவை முடிந்ததும் ஸ்ராத்தம் நிறைவு பெற்றது. 2 மணிக்கு சாஸ்திரிகள் புறப்பட்டார்.
அவருக்கு 800.00ம், பிராமணாளுக்கு தலா 400.00, 400.00 வீதமும் மொத்தம் தக்ஷிணையாக 1600.00 ரூபாய் கொடுத்தேன்.
2-00 முதல் 2-45 வரை இரண்டு பாட்சுகளாக் நாங்கள் சாப்பிட்டோம். 3-45க்கு எல்லாரும் கிளம்பிப் போய்விட்டனர். வர வர சிரமம் அதிகமாக உள்ளது. WILL POWER இருப்பதால் எப்படியோ சமாளித்து வருகிறோம், இந்த வருஷமும் (2013) ஸ்ராத்தங்கள் நன்றாக நடந்தேறின - அப்பா, அம்மாவின் ஆசிகளால். அப்பா, அம்மாவிற்கு விஜயா மற்றும் என்னுடைய நமஸ்காரங்கள். இது விஜயாவும் நானும் சென்னையில் செய்யும் 17-வது ஸ்ராத்தம்
இந்த ஸ்ராத்தத்தில் நாங்கள் இருவர், கிருத்திகா, அர்விந்த், அதிதி, அர்ஜுன், சரோஜா, அத்திம்பேர், சுகவனம், மங்களம் ஆகியோர் (10 பேர்) கலந்து கொண்டோம். ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா வர இயலவில்லை.
ராஜப்பா
மாலை 5 மணி
18-09-2013

Comments
Post a Comment