அப்பா ஸ்ராத்தம் - 16-09-2013 அப்பாவின் ஸ்ராத்தம் இந்த வருஷம் 16 செப்டம்பர் திங்கட்கிழமை நடந்தது. வழக்கம் போல 7 நாட்களுக்கு முன்பே மளிகை சாமான்களை வாங்கிவிட்டோம். மார்த்தாண்டன் கடையிலிருந்து வாங்கினோம். ஞாயிறு 15-ஆம் தேதி நாங்கள் மந்தைவெளிக்கு ஒரு கல்யாணத்திற்கு காரில் சென்றோம். அங்கு கோவை பழமுதிர் நிலையத்தில் காய்கறிகள, பழங்கள் வாங்கினோம். தூக்க வேண்டிய சிரமம் குறைந்தது. பிறகு, 10 மணிக்கு திருவான்மியூர் மார்க்கெட் சென்று, வாழையிலை வெற்றிலை, வாழைக்காய் போன்றவற்றையும் ,விட்டுப்போன மீதி காய்கறிகளையும் வாங்கினோம். அன்று மாலை 4-45க்கு காய்கறிகள் நறுக்க ஆரம்பித்தோம்; 7 மணிக்கு முடிந்தது. பாத்திரங்கள் தேய்த்து வைப்பதும் முடிந்தது. மறுநாள் 16-09-2013 காலை 5 -15க்கே இரண்டு பேரும் எழுந்து, குளித்து விட்டோம்; ஸ்ராத்த சமையலை விஜயாவும் கிருத்திகாவும் ஆரம்பித்தனர். 7-00 க்கு சரோஜா அக்காவும், மங்களமும், சுகவனமும் வந்தனர். விஜயா, கிருத்திகா, மங்களம், சரோஜா ஆகிய நால்வரும் சமையலில் ஈடுபட்டனர். 10:15 க்கு 2 பிராமணாளும், 11-15க்கு சாஸ்திரிகளும் வந்தனர். ஸ்ரீ வெங்கடேச ச...