அப்பா ஸ்ராத்தம் - 28-08-2012
அப்பாவின் ஸ்ராத்தம் இந்த வருஷம் 28 ஆகஸ்ட் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடந்தது. வழக்கம் போல பத்து நாட்களுக்கு முன்பே மளிகை சாமான்களை வாங்கிவிட்டோம். மார்த்தாண்டன் கடையிலிருந்து வாங்கினோம்.
ஞாயிறு 26-ஆம் தேதி நாங்கள் படூருக்கு காரில் கிளம்பினோம். போகும் வழியில் திருவான்மியூர் மார்க்கெட்டில் தேவையான பழங்களையும், பல காய்கறிகளையும் வாங்கினோம். தூக்க வேண்டிய சிரமம் குறைந்தது. மறுநாள் 27-ஆம் தேதி காலை வெற்றிலை, வாழையிலை, மீதி காய்கறிகளையும் வாங்கினோம். திருவான்மியூர் மார்க்கெட்டில் வாழையிலை விலை மிகவும் அதிகம் எனத் தோன்றியது.
வீட்டு வாத்யார் சந்திரன் சாஸ்திரிகள் உடம்பு முடியாமல் இருப்பதால், அவரது மருமான் ஸ்ரீ சாம்பமூர்த்தி வாத்யாரிடம் சொல்லியிருந்தேன். அம்மா ஸ்ராத்தத்திற்கு இவர்தான் வந்தார். ஆனால் திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு ஃபோன் பேசி, தான் வர இயலாது, இன்னொருவரை அனுப்பி வைக்கிறேன் என்று இவர் சொல்லிவிட்டார்.
திங்கட்கிழமை மாலை 4-45க்கு காய்கறிகள் நறுக்க ஆரம்பித்தோம்; 7 மணிக்கு முடிந்தது. பாத்திரங்கள் தேய்த்து வைப்பதும் முடிந்தது. மறுநாள் காலை 4-15க்கே இரண்டு பேரும் எழுந்து, குளித்து விட்டு, ஸ்ராத்த சமையலை விஜயாவும் பாராயணங்களை நானும் ஆரம்பித்தோம். 6-45க்கு ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா வந்தனர். 7-45க்கு சரோஜா அக்காவும், 8-45க்கு சுகவனமும் வந்தனர். விஜயா, கல்யாணி, சரோஜா ஆகிய மூவரும் சமையலில் ஈடுபட்டனர்.
9-45க்கு பிராமணாளும், 10-15க்கு சாஸ்திரிகளும் வந்தனர். ஸ்ரீ வெங்கடேச சர்மா என்பது அவரது பெயர். தரமணியில் வசிக்கிறார். 10-20க்கு ஆரம்பித்த ஸ்ராத்தம் 12-45க்கு பிராமணாள் சாப்பிட்டதும் 90% முடிந்தது. இந்த சாஸ்திரிகள் மிக நன்றாக பண்ணி வைத்தார். மந்திரங்களை நான் சொல்லி பண்ண, சுகவனமும் ஜெயராமனும் பங்கு கொண்டனர். 11-30க்கு ராமமூர்த்தி அத்திம்பேரும், பின்னர் சுதா, குழந்தை தர்ஷிணியும், சதீஷும் வந்தனர். ப்ரஹ்ம யக்ஞம் முதலானவை முடிந்ததும் ஸ்ராத்தம் நிறைவு பெற்றது. 1-15க்கு சாஸ்திரிகள் புறப்பட்டார்.
அவருக்கு 600.00ம், பிராமணாளுக்கு தலா 300.00, 300.00 வீதமும் மொத்தம் தக்ஷிணையாக 1200.00 ரூபாய் கொடுத்தேன். அம்மா ஸ்ராத்தத்திற்கு கொடுத்ததை விட இது 100 ரூபாய் அதிகம்.
1-15 முதல் 2-15 வரை இரண்டு பாட்சுகளாக் நாங்கள் சாப்பிட்டோம். 3-45க்கு எல்லாரும் கிளம்பிப் போய்விட்டனர். கடைசியாக ஜெயராமன் 3-50க்கு கிளம்பினான். வர வர சிரமம் அதிகமாக உள்ளது. WILL POWER இருப்பதால் எப்படியோ சமாளித்து வருகிறோம், இந்த வருஷம் (2012) ஸ்ராத்தங்கள் நன்றாக நடந்தேறின - அப்பா, அம்மாவின் ஆசிகளால். அப்பா, அம்மாவிற்கு விஜயா மற்றும் என்னுடைய நமஸ்காரங்கள். இது விஜயாவும் நானும் சென்னையில் செய்யும் 15-வது ஸ்ராத்தம்
இந்த ஸ்ராத்தத்தில் நாங்கள் இருவர், கிருத்திகா, சரோஜா, அத்திம்பேர், சுகவனம், ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா, சுதா, தர்ஷிணி, சதீஷ் ஆகியோர் (11 பேர்) கலந்து கொண்டோம். பத்மா, மங்களம் இருவராலும் வர இயலவில்லை.
ராஜப்பா
காலை 9 மணி
29-08-2012

Comments
Post a Comment