அப்பா ஸ்ராத்தம் - 28-08-2012 அப்பாவின் ஸ்ராத்தம் இந்த வருஷம் 28 ஆகஸ்ட் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடந்தது. வழக்கம் போல பத்து நாட்களுக்கு முன்பே மளிகை சாமான்களை வாங்கிவிட்டோம். மார்த்தாண்டன் கடையிலிருந்து வாங்கினோம். ஞாயிறு 26-ஆம் தேதி நாங்கள் படூருக்கு காரில் கிளம்பினோம். போகும் வழியில் திருவான்மியூர் மார்க்கெட்டில் தேவையான பழங்களையும், பல காய்கறிகளையும் வாங்கினோம். தூக்க வேண்டிய சிரமம் குறைந்தது. மறுநாள் 27-ஆம் தேதி காலை வெற்றிலை, வாழையிலை, மீதி காய்கறிகளையும் வாங்கினோம். திருவான்மியூர் மார்க்கெட்டில் வாழையிலை விலை மிகவும் அதிகம் எனத் தோன்றியது. வீட்டு வாத்யார் சந்திரன் சாஸ்திரிகள் உடம்பு முடியாமல் இருப்பதால், அவரது மருமான் ஸ்ரீ சாம்பமூர்த்தி வாத்யாரிடம் சொல்லியிருந்தேன். அம்மா ஸ்ராத்தத்திற்கு இவர்தான் வந்தார். ஆனால் திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு ஃபோன் பேசி, தான் வர இயலாது, இன்னொருவரை அனுப்பி வைக்கிறேன் என்று இவர் சொல்லிவிட்டார். திங்கட்கிழமை மாலை 4-45க்கு காய்கறிகள் நறுக்க ஆரம்பித்தோம்; 7 மணிக்கு முடிந்தது. பாத்திரங்கள் தேய்த்து வைப்பதும் முடிந்தது. மறுநாள் காலை 4-15க்கே இரண்டு ...