Skip to main content

ரமணியின் சஷ்டி அப்தபூர்த்தி

விஜயாவின் அண்ணா ரமணி (வெங்கடராமன்) யின் சஷ்டி அப்தபூர்த்தி 2007ஆம் வருஷம், அக்டோபர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திருவனந்தபுரத்திலுள்ள அவர்கள் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக நான், விஜயா, மற்றும் விஜயாவின் பெரிய அக்கா இந்திரா ஆகிய மூவரும் சென்னையிலிருந்து அக் 10ஆம் தேதி மாலை 7-30 அனந்தபுரி எக்ஸ்பிரஸில் கிளம்பினோம். இந்திரா அன்று காலையிலேயே எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். இரவுக்கான உணவாக இட்லியும், தயிர் சாதமும், மறுநாள் காலைக்காக ப்ரெட்டும் எடுத்துக் கொண்டோம். எக்மோர் ரயில் நிலையத்திற்கு மாலை 6-45க்கே சென்று விட்டோம். ரயில் 7-30 க்கு கிளம்பியது.

மறுநாள் (அக் 11) காலை 7-30க்கு திருநெல்வேலி வந்தது - ரயிலே காலியாகி விட்டது ! மெதுமெதுவாக ரயில் 11-40க்கு தி-புரனம் சென்றது. ரமணி தன் MARUTI 800 கார் கொண்டு வந்திருந்தான். வீட்டிற்கு வந்து, குளித்து சாப்பிட்டோம். சாப்பாடா அது ?? கண்றாவி. வெளியிலிருந்து வரவழைத்து இருந்தார்கள். கேரள சமையலே மிக மிக மோசம். நான் சாப்பிடவேயில்லை. அன்று வெளியில் எங்கும் போகவில்லை.

அக் 12 வெள்ளியன்று, ஆனந்த், ஐஸ்வர்யா, குழந்தை ஆதித்யா, ஐஸ்வர்யாவின் அப்பா, அம்மா, ஆகியோர் பெங்களூரிலிருந்தும், லலிதா, குமார் சென்னையிலிருந்தும் வந்தனர். குழந்தை வந்தததும் வீடு களை கட்டியது. சாப்பாடு ஒரு மாமி வந்து வீட்டிலேயே பண்ணினாள் - மோசமான சமையல், கேரளாவிற்கே சிறப்பு!! மாலை ஆனந்த், குமார், லலிதா, விஜயா ஆகியோர் மார்க்கெட் சென்று காய்கறி, பூ, பழம் வாங்கி வந்தனர். பம்பாயிலிருந்து ரவி அன்றிரவு 11 மணிக்கு வந்தான்.

அக் 13 சனிக்கிழமை - காலை 4 மணிக்கே எழுந்து குளித்து ரெடியாகி விட்டோம். 6-15க்கு, சாஸ்திரிகள் 12 பேர் வந்து ருத்ரம் சொல்ல ஆரம்பித்தனர். நடுவில் சிற்றுண்டிக்காக (கஞ்சி மற்றும் உப்புமா) இடைவெளி விட்டபின்னர் மீண்டும் ருத்ரம் ஆரம்பித்தது. பகல் 2 மணியாகி விட்டது முடிய. பின்னர் சாப்பாடு.

அக் 14 ஞாயிற்றுக்கிழமை - சஷ்டிஅப்தபூர்த்தி. இன்றும் சீக்கிரமே எழுந்து கொண்டோம். 6-30 மணிக்கு ஆரம்பித்தது, 11-45க்கு முடிவடைந்தது. மிகவும் நன்றாக நடந்தது. அன்று மதியம் 2 மணி ரயிலில் லலிதா - குமார் சென்னை புறப்பட்டனர். பத்மா மன்னியின் தங்கை கணவர் சுவாமிநாதன் 5-30 மணி ரயிலில் புறப்பட்டார்.










அன்றிரவு 8 மணிக்கு, ரமணி, இந்திரா, விஜயா, நான் ஆகிய நாலு பேரும் பத்மனாபஸ்வாமி கோயிலுக்குச் சென்றோம். பிரம்மோத்சவம் இங்கு ஸ்ரீவேலி என்று அழைக்கப்படுகிறது.

ஸ்வாமி உள்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வருகிறார். முதலில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது பெரிய தமுக்கு வைத்து அடித்துக்கொண்டு வந்தனர். பின்னர் ராஜாவின் சேவகர்கள், ராஜாவின் வீரவாள் பின் தொடர்ந்தன. பின்னர் ராஜாவே நடந்து வந்தார். பின்னர் ஸ்வாமி. மிகவும் அழகாக இருந்தது.

ரமணியின் நண்பர் ஒருவர் வீட்டுக் கொலுவிற்கு போய்விட்டு, வீடு திரும்பினோம். அன்றிரவு, விஜயாவிற்கு ஜுரம் வந்து விட்டது. நெறய்ய தடவை பாத்ரூம் போய் வந்தாள். URINARY TRACT INFECTION ? -

அக் 15 திங்கட்கிழமை காலை விஜயா டாக்டரிடம் சென்று வந்தாள். ஊருக்குப் போகலாம் என டாக்டர் கூறியபடியால், பகல் 4-20 மணி ரயிலில் சென்னை புறப்பட்டோம். தி-வேலி வரை கூட்டமே இல்லை. விஜயாவிற்கு இட்லி, தயிர்சாதம். நான் சப்பாத்தி, குருமா ஆர்டர் பண்ணினேன். தி-வேலியில் கிடைக்கும் எனச் சொல்லி, பணத்தையும் (ரூ. 21/-) வாங்கிக்கொண்டு போய்விட்டான். தி-வேலி வந்து, ரயில் கிளம்பி 1/2 மணி நேரமும் ஆகிவிட்டது. சப்பாத்தி வரும் வழியை காணோம் ! இனி வராது, 21 ரூபாய்
நஷ்டம் என எண்ணியபோது கடைசியில் ஒருவழியாக வந்தது.

அக் 16 காலை 8-45க்கு எக்மோர் வந்தோம். ஆட்டோ பிடித்து வீடு வந்தோம். எங்களை பார்த்து அதிதிக்கு ஒரே சந்தோஷம். சுற்றி சுற்றி வந்தாள்.

இப்படியாக எங்கள் திருவனந்தபுரம் பயணம் இனிது நடந்து முடிந்தது.

ராஜப்பா
18-10-2007 மாலை 6 மணி

Comments

Popular posts from this blog

Kumar-Lalitha Sashti Aptha Poorthy

Kumar celebrated his Sashti Aptha Poorthy (60th birthday) on 03 June 2009 at Annanagar West. Rudra Ekadasi was performed at 05:00 AM; we didn't attend this. Ganesan had come from Mumbai on 2nd June afternoon 1:30 PM and he stayed with us. Ramani came by train on 2nd morning and he stayed with Lalitha at Avadi. On 3rd, we two and Ganesan took ARUN's car with a driver and went to Annanagar by 0815. The rituals were going on already. Indira, Sruthi, Akila, Raja, Aparna, Jyotsna were already there. Later, Saroja, Athimber came. Gayathri, Sowmya, Sriram came with Sudha and her inlaws in a calltaxi. Krithika came with Aditi in their car, with a driver. Arvind took ill suddenly, so he couldn't come. TSG and mami came. The function was a nice one; it was over by 1215 PM. After lunch all of us started leaving. We were home by 2-15PM. rajappa 11:00 am on 6 June 2009

TRVG's daughter's Marriage

TR Venugopal is known to us since 1971 from our Poona days. He is now Senior Accounts officer at DMRL, Hyderabad. He performed the marriage of his daughter JANANI with Natarajan at Nanganallur Chennai on Sunday, 10th July 2011. Vijaya and I attended it. Venugopal on the right, his wife Saraswathi on the left We left house at 6-10 AM in Wagon-R and reached the Rama Mandiram Kalyana Mandapam at Nanganallur by 6-50. The Mandapam is just next to the Anjaneyar Koil. There we met my former colleagues at ERDL Cell, DRDL Hyd. Ganesan, Nair, Jagadeesan, Saibaba, Subba Reddy, Srinivasa Reddy, S Venugopala Murthy, Venkataramaiah, Ramakrishnaiah, Kaleeswaran, Mohan Rao, Rangarajan etc; they had come with their wives. Ganesan and his wife Gomathi with us NAIR (behind Vijaya) his daughter PREETHI (next to Vijaya) Preethi's husband (Airforce, Agra) is also seen. Venkataramaiah, Srinivas Reddy, Ramakrishnaiah, ME, SVG Murthy, his wife Vijaya, Saibaba's wife, Saibaba Ramalakshmi, now a

Anna Centenary Library, Kotturpuram

ANNA CENTENARY LIBARARY (அண்ணா நூற்றாண்டு நூலகம்) is a newly established State Library of Tamilnadu. It was declared open on 15th Sept 2010. Located in Kotturpuram, Chennai. This last Sunday, 1st May 2011, we hit upon the idea - we will go and see this library. No serious reason, but a sudden whiff of fancy. Vijaya, her old classmate and friend Mrs Prema, and I left house at 3-30PM. A bus upto Madhya Kailash, and an auto thereon, left us at the gates of this huge, beautiful building at 4 PM. From the outside, it was immensely impressive and imposing - maybe of 9 or 10 floors, exquisitely constructed. As we walked the lawns to reach the Main Entrance, the interest in us was bubbling. (Caution: Handbags, Cameras are strictly prohibited. Even waterbottles are not allowed inside the halls.) There is a 5-feet bronze statue of Mr CN Annadurai, in whose name and honour this library is built. This is the Tamilnadu Chief minister Mr M Karunanidhi's pet project and he, as usual, has ov