விஜயாவின் அண்ணா ரமணி (வெங்கடராமன்) யின் சஷ்டி அப்தபூர்த்தி 2007ஆம் வருஷம், அக்டோபர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திருவனந்தபுரத்திலுள்ள அவர்கள் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நான், விஜயா, மற்றும் விஜயாவின் பெரிய அக்கா இந்திரா ஆகிய மூவரும் சென்னையிலிருந்து அக் 10ஆம் தேதி மாலை 7-30 அனந்தபுரி எக்ஸ்பிரஸில் கிளம்பினோம். இந்திரா அன்று காலையிலேயே எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். இரவுக்கான உணவாக இட்லியும், தயிர் சாதமும், மறுநாள் காலைக்காக ப்ரெட்டும் எடுத்துக் கொண்டோம். எக்மோர் ரயில் நிலையத்திற்கு மாலை 6-45க்கே சென்று விட்டோம். ரயில் 7-30 க்கு கிளம்பியது. மறுநாள் (அக் 11) காலை 7-30க்கு திருநெல்வேலி வந்தது - ரயிலே காலியாகி விட்டது ! மெதுமெதுவாக ரயில் 11-40க்கு தி-புரனம் சென்றது. ரமணி தன் MARUTI 800 கார் கொண்டு வந்திருந்தான். வீட்டிற்கு வந்து, குளித்து சாப்பிட்டோம். சாப்பாடா அது ?? கண்றாவி. வெளியிலிருந்து வரவழைத்து இருந்தார்கள். கேரள சமையலே மிக மிக மோசம். நான் சாப்பிடவேயில்லை. அன்று வெளியில் எங்கும் போகவில்லை. அக் 12 வெள்ளியன்று, ஆனந்த், ஐஸ்வர்யா, குழந்தை ஆதித்யா, ஐஸ்வ...