கடவுள் அன்றாடம் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அன்றாடம் நடந்து கொண்டிருப்பதால் நாம் அவைகளுக்கு அதிக மதிப்பு தருவதில்லை. கடவுள் தன் பணியை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்.. எனக்கு மிகவும் வேண்டிய பெண்மணியின் வாழ்க்கையில் நடந்த, ஆனால் எளிதில் நம்ப முடியாத அற்புதத்தைப் பற்றி எழுதப் போகிறேன். இது நான் நேரிலேயே பார்த்தது என்று முதலிலேயே கூறி விடுகிறேன்.
சில வருஷங்களுக்கு முன்பு - 1995ல்- நாங்கள் எட்டு பேர் குருவாயூர் போகக் கிளம்பினோம். அது வரை நான் குருவாயூர் போனதில்லை. எங்களுடன் ஒரு பெண்மணியும் வந்திருந்தார். ரயில் ஏறியதும் அவர் ”அம்மாடி.. என்னாலே அதிக நேரம் நிற்கவோ உட்காரவோ முடியாது. நான் படுத்துக் கொள்கிறேன்.” என்று சொல்லியபடியே, தன் இடுப்பிலிருந்து ஒரு பட்டையான பெல்ட்டைக் கழட்டினார்.
“ என்ன மாமி..இது? இத்தனை பட்டையாக இருக்கிறது இந்த பெல்ட்?” எங்களில் ஒருத்தர் கேட்டார். ”அதுவா .... இந்த பெல்ட் இல்லாவிட்டால் என்னால் ஒரு நிமிஷம் கூட நிற்கமுடியாது. என் முதுகு எலும்பில் இரண்டு இணைப்புகள் சரியாக இல்லை. L- 4, மற்றும் L - 5 இல் தேய்மானம் ஆகிவிட்டதால், அந்த இடத்தில் உடல் கனத்தின் பாதிப்பு ஏற்படுகிறது. பதினைந்து வருஷமாக என்னோடு ஒட்டு உறவாடிக்கொண்டிருக்கும் பெல்ட் இது.”
”எப்பவுமா பெல்ட்?...”
”ஆமாம் அம்மா .... இதுக்குமுன்னே ஒரு இரும்பு பட்டையை பெல்ட் போல் செய்து கொடுத்தார்கள். அதன் கனம் ஒரு கிலோவுக்கு மேல் இருக்கும்.”.
”நீங்கள் டில்லியில் இருந்தீர்களே .. அங்கே பெரிய ஹாஸ்பிடலில் காண்பித்தீர்களா?. அங்கேயும் 'எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில்காண்பித்தேன்.’ இது பிறவியிலேயே ஏற்பட்டப் பிரச்சனை .. வயதாகிவிட்டதால் இப்போது அது தலையைத் தூக்கித் தொந்திரவு தருகிறது. ஆபரேஷன் எதுவும் செய்ய முடியாது. 24 மணிநேரமும் பெல்ட் போட்டுக் கொண்டுதான் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் படுத்திருக்க வேண்டியதுதான்”, என்று சொல்லிவிட்டார்கள்.
”அடப்பாவமே......”
” பாவம் பண்ணவே தான் இப்படி அவதிப்பட்டுண்டு இருக்கேன். .அந்த இரும்புப்பட்டை உராய்ந்து உராய்ந்து கிழித்த புடவைக்குக் கணக்கே இல்லை. பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் எங்களுக்கு வேண்டிய ஆர்த்தோ டாக்டர்கள் இருக்கிறார்கள். கணவன், மனைவி இரண்டுபேருமே ஆர்த்தோ டாக்டர்கள். அவர்களிடம் காட்டினோம். அவர்கள் 4, 5 மணிநேரம் ஏதேதோ டெஸ்ட் செய்துவிட்டு ... பெல்ட் தான் ஒரே மருந்து” என்று சொல்லி அக்ரலிக் ஷீட்டை சூடாக்கி, சுடச் சுட என் முதுகுத் தண்டின் மேல் வைத்து அதே ஷேப்பில் வளைத்து, அதை ஒரு உறையில் போட்டு, இடுப்புப் பட்டை பெல்ட் மாதிரி தைத்துக் கொடுத்தார்கள். இப்பொழுது புடவை பாழாகாமல் இருக்கிறது. மற்றபடி பெல்ட் இல்லாமல் இருக்கவே முடியாது” என்றார்.
”பாவம் மாமி....”
* * * * * *
பொழுது விடியவில்லை.
விடிகாலை. திருச்சூர் போய்ச் சேர்ந்தோம்.
அங்கு டெலிஃபோன் டிபார்ட்மென்ட் விருந்தினர் விடுதிக்குப் போக மூன்று ஆட்டோ ரிக்ஷாக்களை ஸ்டேஷனில் அமர்த்திக் கொண்டோம். மாமியும் மற்றும் இருவர் ஒரு ஆட்டோவில் ஏறிக் கொண்டனர். மற்றவர்கள் இரண்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். எங்கள் இரண்டு ஆட்டோவும் விருந்தினர் விடுதியை அடைந்து பத்து, பதினைந்து நிமிடங்கள் ஆகியும் மாமியின் ஆட்டோ வரவில்லை.
உள்ளூர் நண்பர் தன் மோட்டார் சைக்கிளில் போய்ப் பார்த்துவரச் சென்றார். நானும் உறவினரும் மற்றொரு ஆட்டோவில் பின் தொடர்ந்தோம், ஸ்டேஷனுக்குப் போகும் பாதி வழியில் நடு ரோடில் ஒரு சிலர் கூட்டமாக நின்று் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் நிறைய ஆட்டோக்கள். ஒரு டெம்போவும் நின்று கொண்டிருந்தது. என்ன என்று நின்று பார்த்தோம். நடு ரோடில் அந்த மாமியும் உடன் வந்த இரண்டு பேரும் உட்கார்ந்திருந்தார்கள். . ஆட்டோவும் டெம்போவும் மோதிக்கொண்டதாகச் சொன்னார்கள்.மாமிக்கு ஷாக் .. மற்றவர்கள் அவரை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள்
மாமி வந்த ஆட்டோ டிரைவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தன் முதலாளியிடம் தகவலைச் சொல்ல ஓடிவிட்டார் என்றும் டெம்போவில் வந்தவருக்கு கால் முறிந்து விட்டது என்றும் சொன்னார்கள்.
”அப்படியே என்னை யாரோ அழுத்துவது போல் இருக்கிறதே,, என்னால் முடியவில்லையே” என்று மாமி சொல்லிக் கொண்டிருந்தாள்.
எங்கு போகவேண்டும் என்று ஆட்டோ டிரைவரிடம்தான் உள்ளூர் நண்பர் சொல்லியிருந்ததால், மாமிக்கும் மற்றவர்களுக்கும் எங்கு போக வேண்டுமென்றும் தெரியவில்லை. எங்களைப் பார்த்ததும்தான் அவர்களுக்குச் சற்று தெம்பு ஏற்பட்டது. மாமிக்கு காயம் எதுவும் இல்லை.
ஒரு மாதிரியாக எல்லோரும் விருந்தினர் விடுதிக்குச் சென்றோம். மாமி மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
விடுதிக்குச் சென்றதும் அவரை படுக்கச் சொன்னோம். படுத்த அடுத்த வினாடியே ”என்னை உட்கார வையுங்கள்... மூச்சே விட முடியவில்லை” என்று துடிதுடித்துக் கொண்டே சொன்னார். எழுப்பி உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தினோம்.
சிறிது நேரம் கழித்து மாமிக்குச் சற்று தெம்பு வந்தது. குளித்துவிட்டு வந்தார். “எனக்கு எல்லாம், சரியாகிவிட்டது.. .குருவாயூருக்குப் போகலாம்” என்றார்.
பஸ்ஸைப் பிடித்து குருவாயூர் போய், நாலு மணி நேரம் கியூவில் நின்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, அன்று மாலை கோவை வந்தோம். அதுவரை மாமி ஒரு நிமிடம் கூட ஓய்வே எடுக்கவில்லை.
மறுநாள் சென்னை வந்தடைந்தோம். மாமி டாக்டரிடம் போனார். விலா எலும்பில் லேசான வலி இருந்ததால் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் மயிரிழை அளவு எலும்பு முறிவு இருந்தது தெரிந்த்து. ஒரு மாதம் ஓய்வாக இருக்கச் சொன்னார் டாக்டர். மாமியும் அப்படியே இருந்தார். விலா எலும்பு வலி போய்விட்டது. கூடவே இடுப்பு வலியும் போய்விட்டது என்று மாமி உணர்ந்தார், பெல்ட் இல்லாதபோதும் இடுப்பில் வலியே இல்லை. இது என்ன மாயம்? வாழ்க்கை முழுதும் பெல்ட்டோடு இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்களே!
பெல்ட் போடாமல் மாமி மாடி ஏறி இறங்கினார். உஹூம்.. வலியே இல்லை. வாக்கிங் போனார். துளிக்கூட கஷ்டமாக இல்லை.
அந்த கணமே “பெல்ட்டே போய் வா” என்று அதற்கு விடை கொடுத்து விட்டார்.
“ இல்லை, அம்மா. 15 வருஷமாகப் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.. உங்கள் எல்-4, எல்-5 பிர்சனை தீரவே தீராது. மறுபடியும் சில நாட்களில் தலை தூக்கும்” என்றார் டாக்டர் .
” இல்லை டாக்டர் .. அந்தப் பிரச்சனை ‘டாட்டா’ காட்டிவிட்டுப் போய்விட்டது” என்றார் மாமி உறுதியாக.
அதற்குப் பின் இன்றுவரை - கடந்த 15 வருஷமாக - தலையே காட்டவில்லை! இந்த சம்பவத்தை மாமி யாரிடம் சொன்னாலும், “என்ன மாமி, நம்பவே முடியலையே. அதிசயமாக இருக்கிறதே!” என்பார்கள். புது டில்லி அகில இந்திய மருத்துவமனை டாக்டர்கள் கூட மாமியிடம் வியப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
எல்லாரிடமும் மாமி “அதிசயமா?.. ’டிவைன் டாக்டர்’ குருவாயூரப்பன் செய்ததை அதிசயம் என்று சொல்லாதீங்கோ. அருள் என்று சொல்லுங்கோ” என்பாள்.
* * * * * *
மேலே விவரித்த சம்பவத்தை நம்பாதவர்களுக்கு ஒரு சின்னத் தகவல்: அந்த மாமி என் மனைவியார்தான்!
Taken with thanks from Kadugu-Thaalippu http://kadugu-agasthian.blogspot.com/
rajappa
11:00 AM
7 Sep 2010

Awesome blog sir...
ReplyDelete