மன்னியின் ஆப்தீக ஸ்ராத்தம். பெரிய மன்னி (மைதிலி) சென்ற ஆண்டு 2009 ஆகஸ்ட் மாஸம் 1-2 ஆம் தேதி நடு இரவில் காலமானார். அவரது ஆப்தீக ஸ்ராத்தம் இந்த வருஷம் 2010 ஜூலை 22-ஆம் தேதி தில்லியில் நடந்தது. அதற்கு விஜயாவும் நானும் ஜூலை 16 காலை ராஜதானி எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து கிளம்பினோம். அர்விந்த் காரில் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தோம். தில்லியில் வாசுவும், அபிலாஷும் வந்து எங்களைக் கூட்டிச் சென்றனர்; ஸ்ரீகாந்த் வீட்டில் காரியங்கள் நடந்தன. நாங்கள் அங்குதான் இருந்தோம். ஞாயிறு, ஜூலை 18 ஊன மாஸிகம் நடைபெற்றது.இதுதான் 4வதும் இந்த வருஷத்தில் செய்யப்படும் கடைசியுமான மாஸிகம். வாசு, ஸ்ரீதர், ஸ்ரீகாந்த், ரவி நால்வரும் கலந்து கொண்டனர். சாஸ்திரிகள் 11-30 மணிக்கு வந்து, காரியத்தை ஆரம்பித்தார். மதியம் 1-30க்கு முடிந்தது. 2-45 க்கு சாப்பாடு முடிந்தது. தயிர் பச்சடி, பழப் பச்சடி, வாழைக்காய், சேப்பங்கிழங்கு, பாகற்காய் என 3 கறிகள், (எல்லா கறிகளிலும் நிறைய தேங்காய்) , கொத்தவரங்காய் கூட்டு, வாழைத்தண்டு மோர்க்குழம்பு, ரசம், தயிர், எள் உருண்டை, பயத்தம் உருண்டை, அதிரஸம், வடை, பயத்தம் பருப்பு பாயஸம் என திவஸ சமையல்தா...