Skip to main content

Posts

Showing posts with the label Kadugu

Dr Guruvayoor Appan, MD

கடவுள் அன்றாடம் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அன்றாடம் நடந்து கொண்டிருப்பதால் நாம் அவைகளுக்கு அதிக மதிப்பு தருவதில்லை. கடவுள் தன் பணியை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்.. எனக்கு மிகவும் வேண்டிய பெண்மணியின் வாழ்க்கையில் நடந்த, ஆனால் எளிதில் நம்ப முடியாத அற்புதத்தைப் பற்றி எழுதப் போகிறேன். இது நான் நேரிலேயே பார்த்தது என்று முதலிலேயே கூறி விடுகிறேன். சில வருஷங்களுக்கு முன்பு - 1995ல்- நாங்கள் எட்டு பேர் குருவாயூர் போகக் கிளம்பினோம். அது வரை நான் குருவாயூர் போனதில்லை. எங்களுடன் ஒரு பெண்மணியும் வந்திருந்தார். ரயில் ஏறியதும் அவர் ”அம்மாடி.. என்னாலே அதிக நேரம் நிற்கவோ உட்காரவோ முடியாது. நான் படுத்துக் கொள்கிறேன்.” என்று சொல்லியபடியே, தன் இடுப்பிலிருந்து ஒரு பட்டையான பெல்ட்டைக் கழட்டினார். “ என்ன மாமி..இது? இத்தனை பட்டையாக இருக்கிறது இந்த பெல்ட்?” எங்களில் ஒருத்தர் கேட்டார். ”அதுவா .... இந்த பெல்ட் இல்லாவிட்டால் என்னால் ஒரு நிமிஷம் கூட நிற்கமுடியாது. என் முதுகு எலும்பில் இரண்டு இணைப்புகள் சரியாக இல்லை. L- 4, மற்றும் L - 5 இல் தேய்மானம் ஆகிவிட்டதால், அந்த இடத்தில் உடல்...